/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு 87 பதக்கம்: ஆசிய யோகாசன போட்டியில்
/
இந்தியாவுக்கு 87 பதக்கம்: ஆசிய யோகாசன போட்டியில்
ADDED : ஏப் 27, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஆசிய யோகாசன போட்டியில் இந்தியாவுக்கு 83 தங்கம் உட்பட 87 பதக்கம் கிடைத்தது.
டில்லியில், ஆசிய யோகாசன போட்டி சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தியா, நேபாளம், இலங்கை, ஜப்பான், தாய்லாந்து, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 21 நாடுகள் பங்கேற்றன. இதில் ஆதிக்கம் செலுத்திய இந்திய நட்சத்திரங்கள் 83 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 87 பதக்கங்களை அள்ளினர்.
மூன்று தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, 10 பதக்கம் வென்ற ஜப்பானுக்கு 2வது இடம் கிடைத்தது. அடுத்த மூன்று இடங்களை மங்கோலியா, ஓபன், நேபாளம் கைப்பற்றின.