தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றது இந்தியா: உலக வில்வித்தையில் ஆதிக்கம்

தங்கம் வென்றது இந்தியா: உலக வில்வித்தையில் ஆதிக்கம்

தங்கம் வென்றது இந்தியா: உலக வில்வித்தையில் ஆதிக்கம்


ADDED : மே 25, 2024 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2024 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எசியான்: உலக கோப்பை வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.

தென் கொரியாவில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ்--2') தொடர் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியா, துருக்கி அணிகள் மோதின. ஜோதி சுரேகா, பர்னீத் கவுர், ஆதித்தி கோபிசந்த் சுவாமி இடம் பெற்ற இந்திய அணி 232-226 என்ற கணக்கில் தங்கம் வென்றது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற ஜோதி-பர்னீத்-ஆதித்தி அடங்கிய இந்திய அணி, சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக 6வது தங்கத்தை தட்டிச் சென்றது. இந்த ஆண்டு உலக கோப்பை அரங்கில் தனது 5வது தங்கம் வென்றார் ஜோதி.

இந்தியா 'வெள்ளி'

கலப்பு அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் ஜோதி சுரேகா, பிரியான்ஷு அடங்கிய இந்திய அணி 153-155 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.

ஆண்கள் தனிநபர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிரதமேஷ், நெதர்லாந்தின் மைக் ஸ்க்லோசர் மோதினர். இப்போட்டி 148-148 என சமநிலை அடைந்தது. பின் 'ஷூட்-ஆப்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் பிரதமேஷ் 9-10 என தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us