/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: உலக 'யூத்' பளுதுாக்குதலில்
/
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: உலக 'யூத்' பளுதுாக்குதலில்
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: உலக 'யூத்' பளுதுாக்குதலில்
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: உலக 'யூத்' பளுதுாக்குதலில்
ADDED : மே 01, 2025 10:21 PM

லிமா: உலக யூத் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலம் கிடைத்தது.
பெருவில், உலக யூத், ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. யூத் பெண்களுக்கான 40 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சபர் பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 56, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 72 என, ஒட்டு மொத்தமாக 129 கிலோ பளுதுாக்கிய ஜோஷ்னா 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். தவிர இவர், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
யூத் ஆண்களுக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹர்சபர்தன் சாஹு களமிறங்கினார்.
'ஸ்னாட்ச்' பிரிவில் 87, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 110 என, ஒட்டுமொத்தமாக 197 கிலோ பளுதுாக்கிய ஹர்சபர்தன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். தவிர இவர், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவிலும் வெண்கலத்தை தட்டிச் சென்றார்.