/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீரஜ் சோப்ரா முதலிடம் * 'டைமண்ட் லீக்' ஈட்டி எறிதலில்...
/
நீரஜ் சோப்ரா முதலிடம் * 'டைமண்ட் லீக்' ஈட்டி எறிதலில்...
நீரஜ் சோப்ரா முதலிடம் * 'டைமண்ட் லீக்' ஈட்டி எறிதலில்...
நீரஜ் சோப்ரா முதலிடம் * 'டைமண்ட் லீக்' ஈட்டி எறிதலில்...
ADDED : ஜூன் 21, 2025 11:53 PM

பாரிஸ்: டைமண்ட் லீக் தடகளத்தின் 16வது சீசன் நடக்கிறது. இதன் 4வது சுற்று பிரான்சின் பாரிசில் நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா 27, பங்கேற்றார்.
கடந்த தோகா டைமண்ட் லீக் (மே 16) போட்டியில் இவர், முதன் முறையாக 90 மீ.,க்கும் (90.23) மேல் எறிந்து இருந்தார். இம்முறை முதல் வாய்ப்பில், அதிகபட்சம் 88.16 மீ., துாரம் எறிந்தார்.
பின் 85.10 மீ., துாரம் எறிந்த இவர், அடுத்த 3 முறை 'பவுல்' செய்தார். கடைசி, 6வது வாய்ப்பில் 82.89 மீ., துாரம் மட்டும் எறிந்தார். இருப்பினும், நீரஜ் சோப்ரா (88.16) முதலிடம் பிடித்து, பட்டம் வென்றார்.
இரண்டாவது முறை
டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இவர் வென்ற இரண்டாவது பட்டம் இது. 2017ல் ஜூனியர் சாம்பியனாக, பாரிஸ் டைமண்ட் லீக்கில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா, 5வது இடம் பெற்றார். 8 ஆண்டுக்குப் பின் பாரிசில் பட்டம் வசப்படுத்தினார்.
வெப்பர் ஏமாற்றம்
கடந்த தோகா, போலந்து போட்டியில் முதலிடம் பிடித்த ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (87.88) இம்முறை இரண்டாவது இடம் பெற்றார். பிரேசிலின் லுாயிஸ் மவுரிசியோ (86.62) மூன்றாவது இடம் பிடித்தார்.
2012 ஒலிம்பிக் தங்கமகன் வைல் வால்காட் (டிரினிடாட்), ஆண்டர்சன் பீட்டர்சன் (கிரனடா, 80.29), 2015 உலக சாம்பியன் ஜூலியஸ் எகோ (கென்யா, 80.26), 4, 5, 6வது இடம் பிடித்தனர்.