தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்திய ஓபன் ஸ்குவாஷ்: அனாஹத், அபே சிங் அபாரம்

இந்திய ஓபன் ஸ்குவாஷ்: அனாஹத், அபே சிங் அபாரம்

இந்திய ஓபன் ஸ்குவாஷ்: அனாஹத், அபே சிங் அபாரம்


ADDED : மார் 22, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங், அபே சிங் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மும்பையில், இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ஹனா மோதாஸ் மோதினர். முதலிரண்டு செட்டை 11-5, 11-6 எனக் கைப்பற்றிய அனாஹத், 3வது செட்டை 9-11 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இவர், 4வது செட்டை 11-6 என தன்வசப்படுத்தினார்.

மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் அனாஹத் 3-1 (11-5, 11-6, 9-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபே சிங் மோதினர். இதில் அபே சிங் 3-0 (11-9, 11-8, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us