உள்ளடக்கத்திற்கு செல்ல

இந்திய ஜோடி 'வெண்கலம்': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
இந்திய ஜோடி 'வெண்கலம்': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
ADDED : மே 10, 2026 08:48 PM

அ நிறம் | அளவு
அல்மாட்டி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நீரு தண்டா, விவான் கபூர் ஜோடி வெண்கலம் வென்றது.
கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ஷாட்கன்') தொடர் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நீரு தண்டா, விவான் கபூர் ஜோடி பங்கேற்றது. தகுதிச் சுற்றில் அசத்திய இந்திய ஜோடி 143 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது.
அடுத்து நடந்த பைனலில் 24 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த நீரு தண்டா, விவான் கபூர் ஜோடி வெண்கலம் கைப்பற்றியது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம். முதலிரண்டு இடங்களை சீனதைபே (36 புள்ளி), இத்தாலி (33) தட்டிச் சென்றன.
