/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய ஜோடி தங்கம்: உலக பல்கலை., துப்பாக்கி சுடுதலில்
/
இந்திய ஜோடி தங்கம்: உலக பல்கலை., துப்பாக்கி சுடுதலில்
இந்திய ஜோடி தங்கம்: உலக பல்கலை., துப்பாக்கி சுடுதலில்
இந்திய ஜோடி தங்கம்: உலக பல்கலை., துப்பாக்கி சுடுதலில்
ADDED : நவ 13, 2024 11:18 PM

புதுடில்லி: உலக பல்கலை., துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங், சஞ்ஜீதா ஜோடி தங்கம் வென்றது.
டில்லியில், உலக பல்கலை., துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் 10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகள் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (316.2 புள்ளி), சஞ்ஜீதா தாஸ் (316.8) ஜோடி, 633.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது.
அடுத்து நடந்த பைனலில் இந்திய ஜோடி, தென் கொரியாவின் கிம் ஹியோபீன், லீ ஜுன்வான் ஜோடியை சந்தித்தது. இதில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 17-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது தங்கப்பதக்கம் ஆனது. ஏற்கனவே பாலக் குலியா-அமித் சர்மா (10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணி), பவ்தேக் சிங் கில் (ஸ்கீட்) தலா ஒரு தங்கம் வென்றிருந்தனர். தவிர, ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், தனது 2வது பதக்கம் வென்றார். ஏற்கனவே இவர், 50 மீ., 'ரைபிள்-3-பொஷிசன்ஸ்' பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.

