/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய ஜோடி 'வெள்ளி': உலக துப்பாக்கி சுடுதலில்
/
இந்திய ஜோடி 'வெள்ளி': உலக துப்பாக்கி சுடுதலில்
ADDED : ஏப் 21, 2025 10:00 PM

லிமா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஆர்யா போர்ஸ், ருத்ராங்க் ஷ் ஜோடி வெள்ளி வென்றது.
பெருவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆர்யா போர்ஸ், ருத்ராங்க் ஷ் பாலாசாகேப் பாட்டீல் ஜோடி 632.5 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. இந்தியாவின் நர்மதா நிதின் ராஜு, அர்ஜுன் பாபுதா ஜோடி (630.0 புள்ளி) 7வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தது.
அடுத்து நடந்த பைனலில் இந்திய ஜோடி, நார்வேயின் ஜீனெட் ஹெக் டியூஸ்டாட், ஜான்-ஹெர்மன் ஹெக் ஜோடியை சந்தித்தது. இதில் ஆர்யா போர்ஸ், ருத்ராங்க் ஷ் ஜோடி 11-17 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. முதலிரண்டு இடங்களில் அமெரிக்கா (4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்), சீனா (3 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்) உள்ளன.

