தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்திய வீரர் வருண் விலகியது ஏன்: ஜப்பான் குளறுபடி காரணமா

இந்திய வீரர் வருண் விலகியது ஏன்: ஜப்பான் குளறுபடி காரணமா

இந்திய வீரர் வருண் விலகியது ஏன்: ஜப்பான் குளறுபடி காரணமா


ADDED : செப் 20, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஜப்பானில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் 10 மணி நேரம் தவித்த இந்திய தற்காப்பு கலை வீரர் வருண் சன்யால், உடற்தகுதி இல்லாததால், போட்டியில் இருந்து விலகினார்.

ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு போதிய இடவசதி இல்லை. 'கன்டெய்னர்' வடிவ அறைகள், சொகுசு கப்பல் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு அறையில் மூவர்: இந்தியா சார்பில் பாரம்பரிய கலப்பு தற்காப்பு கலை (எம்.எம்.ஏ.,) போட்டியில் (மல்யுத்தம், குத்துச்சண்டை கலந்தது) பங்கேற்க இருந்தார் வருண். இதற்காக நகோயா சென்ற இவர், 10 மணி நேரமாக தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்தார். அப்போது உணவும் வழங்கப்படவில்லை என புகார் கூறியிருந்தார். ஒருவழியாக இவருக்கு சொகுசு கப்பலில் அறை ஒதுக்கப்பட்டது. அதில் ஏற்கனவே 2 இந்திய வீரர்கள் தங்கியிருந்தனர். ஒரு அறையை 3 பேர் பகிர்ந்து கொண்டதால், வருண் சரியாக துாங்க முடியவில்லை. சத்தான உணவும் கிடைக்கவில்லை.

உடல்நிலை எப்படி: 77 கிலோ பிரிவு காலிறுதியில் வருண் 27, பங்கேற்க இருந்தார். சரியான எடையை தக்க வைக்க, தண்ணீர் குடிப்பதை குறைத்தார். கப்பலில் நீராவி குளியல் எடுத்த போது, இவருக்கு தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு ஏற்பட்டது. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, மயங்கி விழுந்தார். உடற்தகுதி இல்லாததால், ஆசிய விளையாட்டில் இருந்து விலகினார்.

இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்ட செய்தியில்,''போட்டிக்கு முன், எடை குறைப்புக்காக வீரர்கள் நீராவி குளியல் மேற்கொள்வது சகஜம். வருணுக்கு தசைப்பிடிப்பு, உடல் வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஓய்வுக்கு பின், போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உடற்தகுதி இல்லை என்பதை உணர்ந்தார். மருத்துவ காரணங்களுக்காக, போட்டியில் இருந்து விலகினார்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எம்.எம்.ஏ., விளையாட்டு கூட்டமைப்பு தலைவர் நிகில் குந்தர் கூறுகையில்,''வருண் மயங்கி விழுந்த சமயத்தில், அருகில் இருந்த நேபாள வீரர் தான் எழுப்பினார். அந்த சமயத்தில் வருண் என்னிடம் பேசினார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். நீர்ச்சத்துள்ள உணவு கொடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். மீண்டும் கப்பல் அறைக்கு அழைத்து வந்தோம். நலமாக இருக்கிறார். போட்டியில் பங்கேற்க இயலாது,''என்றார்.

நழுவிய வாய்ப்பு

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரான சஞ்ஜீவின் மகன் தான் வருண் சன்யால். சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் (எம்.எம்.ஏ.,) வெண்கலம் வென்று, ஜப்பான், ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றார். 2024ல் பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகம் இருந்ததால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதே போல எடை குறைப்பு முயற்சி, தங்குமிடம் அலைக்கழிப்பு காரணமாக வருணும் பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us