sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

இந்திய அணிகள் ஏமாற்றம்: ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில்

/

இந்திய அணிகள் ஏமாற்றம்: ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில்

இந்திய அணிகள் ஏமாற்றம்: ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில்

இந்திய அணிகள் ஏமாற்றம்: ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில்


ADDED : ஆக 09, 2024 10:26 PM

Google News

ADDED : ஆக 09, 2024 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் ஏமாற்றின.

பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் தடகள போட்டிக்கான 4x400 மீ., தொடர் ஓட்டம் நடந்தது. பெண்கள் பிரிவில் 8 அணிகள், 2 பிரிவுகளாக தகுதிச் சுற்றில் பங்கேற்றன. 'பி' பிரிவில் களமிறங்கிய இந்திய அணியில் சுபா வெங்கடேசன், ஜோதிகா ஸ்ரீ தண்டி, வித்யா ராம்ராஜ், பூவம்மா ராஜு இடம் பெற்றிருந்தனர். இலக்கை 3 நிமிடம், 32.51 வினாடியில் கடந்து 8வது இடம் பிடித்த இந்தியா, ஒட்டுமொத்தமாக 15வது இடத்தை கைப்பற்றி பைனல் வாய்ப்பை இழந்தது.

ஆண்கள் பிரிவில் 8 அணிகள், இரு பிரிவுகளாக தகுதிச் சுற்றில் விளையாடின. 'பி' பிரிவில் விளையாடிய இந்திய அணியில் முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ் ரமேஷ், அமோஜ் ஜேக்கப் இடம் பிடித்திருந்தனர். பந்தய துாரத்தை 3 நிமிடம், 00.58 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்த இந்தியா, ஒட்டுமொத்தமாக 10வது இடத்தை கைப்பற்றி பைனலுக்கு தகுதி பெறத்தவறியது.

இருப்பினும் இந்திய அணி நடப்பு சீசனில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தது. ஒருவேளை இந்திய அணி, 'பி' பிரிவில் 'டாப்-3' அல்லது ஒட்டுமொத்தமாக 'டாப்-8' வரிசையில் இடம் பிடித்திருந்தால் பைனலுக்கு தகுதி பெற்றிருக்கலாம்.






      Dinamalar
      Follow us