/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஆசிய கோப்பை ஹாக்கியில்
/
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஆசிய கோப்பை ஹாக்கியில்
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஆசிய கோப்பை ஹாக்கியில்
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஆசிய கோப்பை ஹாக்கியில்
ADDED : செப் 11, 2025 09:25 PM

ஹாங்சு: ஆசிய கோப்பை ஹாக்கி 'சூப்பர்-4' போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, சீனாவிடம் தோல்வியடைந்தது.
சீனாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கிறது. 'சூப்பர்-4' போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் மும்தாஜ் கான் (38வது நிமிடம்) ஒரு 'பீல்டு' கோல் அடித்து ஆறுதல் தந்தார். சீன அணிக்கு மீராங் சு 2 (4, 56வது நிமிடம்), யாங் சென் (31வது), ஜின்ஜுவாங் டான் (47வது) தலா ஒரு கோல் அடித்தனர். இப்போட்டியில் கிடைத்த 3 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனைகள் வீணடித்தனர்.
முதல் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, 3 புள்ளிகளுடன் உள்ளது. இந்திய அணி, தனது கடைசி 'சூப்பர்-4' போட்டியில் நாளை ஜப்பானை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில், 6 புள்ளிகளுடன் 'டாப்-2' இடத்தை உறுதி செய்து பைனலுக்கு தகுதி பெறலாம். ஒருவேளை போட்டி 'டிரா' ஆனால், சீனா-தென் கொரியா மோதும் போட்டியின் முடிவுக்கு காத்திருக்க வேண்டும்.