/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அமன் ஷெராவத் 'நம்பர்-2' * உலக மல்யுத்த தரவரிசையில்...
/
அமன் ஷெராவத் 'நம்பர்-2' * உலக மல்யுத்த தரவரிசையில்...
அமன் ஷெராவத் 'நம்பர்-2' * உலக மல்யுத்த தரவரிசையில்...
அமன் ஷெராவத் 'நம்பர்-2' * உலக மல்யுத்த தரவரிசையில்...
ADDED : ஆக 19, 2024 11:16 PM

புதுடில்லி: உலக மல்யுத்த தரவரிசையில் 57 கிலோ பிரிவில் 'நம்பர்-2' வீரர் ஆனார் அமன் ஷெராவத்.
சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. இதன் 57 கிலோ பிரிவு பட்டியலில் இந்தியாவின் அமன் ஷெராவத், உலகின் 'நம்பர்-2' வீரர் ஆனார்.
ஒலிம்பிக் செல்லும் முன், இவர் 6வது இடத்தில் இருந்தார். தகுதி போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்தியாவின் ரவிக்குமாரை வீழ்த்தி, பாரிஸ் சென்றார் அமன் ஷெராவத். அரையிறுதியில் ஜப்பானின் ஹிகுச்சியிடம் வீழ்ந்தார். பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் போர்டோ ரிகோவின் டாய் கிரசை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
தவிர ஒலிம்பிக் பதக்கம் வென்ற இளம் இந்தியர் என பெருமை பெற்றார். இதையடுத்து 51,600 புள்ளி பெற்ற அமன் ஷெராவத், புதிய வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். ஹிகுச்சி, 59,000 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க வீரர் ஸ்பென்சர் ரிச்சர்டு (51,400) மூன்றாவதாக உள்ளார்.