ADDED : பிப் 11, 2025 11:05 PM

இந்துார்: இந்தியன் ஸ்னுாக்கர் தொடரில் சாதித்த அத்வானி, தேசிய தொடரில் 36 வது கோப்பை வென்றார்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் தேசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடரின் 91வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான பைனலில் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பங்கஜ் அத்வானி, கோல்கட்டாவின் பிரிஜேஷ் தமானி பலப்பரீட்சை நடத்தினர்.
துவக்கத்தில் 2-4 என பின் தங்கினார் அத்வானி. பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு, 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். தேசிய தொடரில் அத்வானி வென்ற 36 வது கோப்பையாக இது அமைந்தது.
தேசிய தொடரில் பைனலில் மோதிய அத்வானி, பிரிஜேஷ் தமானி என இருவரும், பிப். 15ல் துவங்கும் ஆசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றனர். தவிர, உலக சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.