UPDATED : மே 17, 2026 11:56 PM
ADDED : மே 17, 2026 09:03 PM

ரோம்: இத்தாலியின் ரோம் நகரில், இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, அமெரிக்காவின் கோகோ காப் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ஸ்விடோலினா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 6-7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட ஸ்விடோலினா 6-2 என தன்வசப்படுத்தினார். இரண்டு மணி நேரம், 49 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்விடோலினா 6-4, 6-7, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 3வது முறையாக (2017, 2018, 2026) சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தாலியின் ஜானிக் சின்னர், நார்வேயின் காஸ்பர் ரூட் மோதினர். இதில் சின்னர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ரொனால்டோ ஏமாற்றம்
ரியாத்: சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில், ஆசிய சாம்பியன்ஸ் லீக்-2 கிளப் கால்பந்து 22வது சீசனுக்கான பைனல் நடந்தது. இதில், போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நாசர் (சவுதி அரேபியா), காம்பா ஒசாகா (ஜப்பான்) அணிகள் மோதின. காம்பா ஒசாகா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக கோப்பை வென்றது. அல்-நாசர் அணிக்கு முதல் கோப்பை பெற்று தர வேண்டும் என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கனவு நீடிக்கிறது.
