உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:56 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீநகர்: ஜம்மு–காஷ்மீரின் ஸ்ரீநகரில், 63வது இரானி கோப்பை முதல்தர போட்டி நேற்று துவங்கியது. இதில், ரிஷாப் பன்ட் தலைமையிலான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’, ரஞ்சி கோப்பை ‘நடப்பு சாம்பியன்’ ஜம்மு–காஷ்மீர் அணிகள் விளையாடுகின்றன. ‘டாஸ்’ வென்ற ஜம்மு–காஷ்மீர் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிக்கு ஷிகர் மோகன் (60), சர்பராஸ் கான் (45) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் ரிஷாப் பன்ட் (10)சோபிக்கவில்லை. ரவிச்சந்திரன் ஸ்மரன் (68) நம்பிக்கை தந்தார். ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி முதல் இன்னிங்சில் 237 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஜம்மு–காஷ்மீர் அணி, ஆட்டநேர முடிவில் 21/2 ரன் எடுத்திருந்தது.
