தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஜப்பான் 'பார்முலா-1': வெர்ஸ்டாப்பன் 'சாம்பியன்'

ஜப்பான் 'பார்முலா-1': வெர்ஸ்டாப்பன் 'சாம்பியன்'

ஜப்பான் 'பார்முலா-1': வெர்ஸ்டாப்பன் 'சாம்பியன்'


ADDED : ஏப் 06, 2025 10:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 10:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுசூகா: ஜப்பான் 'பார்முலா-1' கார்பந்தயத்தில் 'ரெட்புல்' அணியின் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார்.

நடப்பு ஆண்டுக்கான 'கிராண்ட்ப்ரி பார்முலா---1' கார்பந்தய உலக சாம்பியன்ஷிப், 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. மூன்றாவது சுற்று ஜப்பானில் நடந்தது. இதன் 'பைனல் ரேஸில்', இலக்கை ஒரு மணி நேரம், 22 நிமிடம், 06.983 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த 'ரெட்புல் ரேஸிங் ஹோண்டா' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கோப்பையை கைப்பற்றினார். 'நடப்பு உலக சாம்பியன்' வெர்ஸ்டாப்பன், ஜப்பான் 'பார்முலா-1'ல் தொடர்ச்சியாக 4வது முறையாக (2022-2025) சாம்பியன் பட்டம் வென்றார். தவிர இது, இவரது 64வது ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்.

அடுத்த இரு இடங்களை முறையே 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணியின் லாண்டோ நோரிஸ் (பிரிட்டன்), ஆஸ்கர் பியாஸ்ட்ரி (ஆஸி.,) கைப்பற்றினர். 'பெராரி' அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன், 7வது இடம் பிடித்தார். மற்றொரு 'பெராரி' அணி வீரர் சார்லஸ் லெக்லெர்க் 4வது இடத்தை பெற்றார். 'மெர்சிடஸ்' அணியின் ஜார்ஜ் ரசலுக்கு 5வது இடம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us