தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஜின்சன் ஜான்சன் ஓய்வு: தடகள போட்டியில் இருந்து

ஜின்சன் ஜான்சன் ஓய்வு: தடகள போட்டியில் இருந்து

ஜின்சன் ஜான்சன் ஓய்வு: தடகள போட்டியில் இருந்து


ADDED : ஜன 07, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 10:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவின் ஜின்சன் ஜான்சன், தடகள போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய தடகள வீரர் ஜின்சன் ஜான்சன் 34 (800, 1500 மீ., ஓட்டம்). கேரளாவை சேர்ந்த இவர், 2009ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது 'சுபேதராக' உள்ளார். கடந்த 2011ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், ஆசிய சாம்பியன்ஷிப் (2015ல் வெள்ளி, 2017ல் வெண்கலம், 800 மீ., ஓட்டம்), ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் (2018, 3 தங்கம்), ஆசிய விளையாட்டில் (ஒரு தங்கம்-2018, 1500 மீ., ஓட்டம், ஒரு வெள்ளி-2018, 800 மீ., ஓட்டம், ஒரு வெண்கலம்-2022, 1500 மீ., ஓட்டம்) பதக்கம் வென்றுள்ளார்.

பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் (2016) 800 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற ஜின்சன் ஜான்சன், தகுதிச் சுற்றோடு திரும்பினார். கடந்த 2018ல் அசாமின் கவுகாத்தியில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கான 800 மீ., ஓட்டத்தில் தேசிய சாதனை (ஒரு நிமிடம், 45.65 வினாடி) படைத்திருந்தார். கடந்த ஆண்டு இவரது சாதனையை முகமது அப்சல் முறியடித்தார். பின், 2019ல் பெர்லினில் நடந்த சர்வதேச தடகள போட்டிக்கான 1500 மீ., ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை (3 நிமிடம், 35.24 வினாடி) படைத்திருந்தார். கடந்த 2018ல் ஜான்சனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் தடகள போட்டியில் இருந்து ஜின்சன் ஜான்சன் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். இதுகுறித்து ஜான்சன் கூறுகையில், ''கடந்த 2007ல் கோல்கட்டாவில் துவங்கிய எனது தடகள பயணம் ஆசிய விளையாட்டில் (2023) பதக்கம் வென்றது வரை நீடித்தது. இதற்காக தடகளத்திற்கு நன்றி. இந்தியாவுக்காக ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்றதை கவுரவமாக கருதுகிறேன். தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். சாதிக்க உதவிய பயிற்சியாளர்கள், தடகள கூட்டமைப்பு நிர்வாகிகள், மத்திய, மாநில அரசு, சகவீரர்களுக்கு நன்றி,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us