/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜோகர் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்
/
ஜோகர் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்
UPDATED : அக் 26, 2024 10:29 PM
ADDED : அக் 26, 2024 09:48 PM

ஜோகர்: 'சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கியில் இந்திய அணி வெண்கலம் வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் 3-2 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான 'சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடந்தது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில், புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இந்திய அணிக்கு தில்ராஜ் சிங் (11வது நிமிடம்), மன்மீத் சிங் (20வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முதல் பாதி முடிவில் இந்தியா 2-0 என முன்னிலையில் இருந்தது. பின் எழுச்சி கண்ட நியூசிலாந்து அணிக்கு ஓவன் பிரவுன் (51வது நிமிடம்), ஜான்டி எல்ம்ஸ் (57வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது.
பின் வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்தியா சார்பில் குர்ஜோத் சிங், மன்மீத் சிங், சவுரப் ஆனந்த் குஷ்வாஹா கோல் அடித்தனர். சந்தன் யாதவ், தனது வாய்ப்பை வீணடித்தார். இந்திய அணி 3வது முறையாக (2017, 2023, 2024) வெண்கலம் வென்றது.