உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 19, 2024 11:36 PM

அ நிறம் | அளவு
டிபிலிசி: கிராண்ட் பிரிக்ஸ் ஜூடோ போட்டியில் இந்தியாவின் கபில் பர்மர் தங்கம் வென்றார்.
ஜார்ஜியாவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிராண்ட் பிரிக்ஸ் ஜூடோ தொடர் நடந்தது. ஆண்களுக்கான 60 கிலோ 'ஜே1' பிரிவு பைனலில் இந்தியாவின் கபில் பர்மர், பிரேசிலின் எலியேல்டன் டி ஒலிவேரா மோதினர். அபாரமாக ஆடிய கபில் பர்மர், 20 வினாடியில் வெற்றியை உறுதி செய்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் உலக, பாராலிம்பிக் தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பெண்களுக்கான 48 கிலோ 'ஜே2' பிரிவில் இந்தியாவின் கோகிலா 5வது இடம் பிடித்தார்.
