/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜூனியர் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்
/
ஜூனியர் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்
ADDED : ஜூன் 02, 2025 10:58 PM

ரோசாரியோ: ஜூனியர் ஹாக்கி லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி -2-4 என அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது.
அர்ஜென்டினாவில், நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடந்தது. இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்றன.
முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, 4வது போட்டியில் சிலியிடம் தோல்வியடைந்தது. பின் எழுச்சி கண்ட இந்தியா, 5வது போட்டியில் உருகுவேயை வென்றது. இந்திய அணி, தனது கடைசி போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் ஏமாற்றிய இந்தியா 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு கனிகா சிவாச் (11, 45வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
இத்தொடரில் இந்தியா பங்கேற்ற 6 போட்டியில், 4 வெற்றி, 2 தோல்வியை பதிவு செய்தது.