/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜூனியர் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்
/
ஜூனியர் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்
ADDED : அக் 15, 2025 10:38 PM

ஜோஹர்: சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 2-4 என, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.
லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ரோகித் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது.
பின் எழுச்சி கண்ட ஆஸ்திரேலிய அணிக்கு ஆஸ்கர் (39, 42வது நிமிடம்), பாட்ரிக் (40வது), டிலான் டவுனி (51வது) கைகொடுத்தனர். தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு 60வது நிமிடத்தில் அர்ஷ்தீப் சிங் ஒரு 'பீல்டு' கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-4 என தோல்வியடைந்தது. நான்கு போட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி 7 என புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (10 புள்ளி, 3 வெற்றி, ஒரு 'டிரா') நீடிக்கிறது.