/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜூனியர் ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்'
/
ஜூனியர் ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்'
ADDED : ஜூன் 13, 2025 11:17 PM

ஆன்ட்வெர்ப்: ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
சிலியில், வரும் டிச. 1--13ல் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி, 'சி' பிரிவில் ஜெர்மனி, அயர்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக பெல்ஜியம் சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் அணி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுடன் 5 போட்டிகளில் விளையாடுகிறது.
முதலிரண்டு போட்டியில் இந்திய அணி, பெல்ஜியத்தை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியிலும் இந்தியா, பெல்ஜியம் மோதின. இதில் இந்திய அணி 3-2 என 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. இந்தியா சார்பில் சோனம் (4வது நிமிடம்), லால்தான்ட்லுவாங்கி (32வது), கனிகா சிவாச் (51வது) தலா ஒரு கோல் அடித்தனர். பெல்ஜியம் அணிக்கு மேரி கோயன்ஸ் (37வது நிமிடம்), மார்டே மேரி (40வது) ஆறுதல் தந்தனர்.