/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் ஜோதி * இந்தியன் ஓபன் ஈட்டி எறிதலில்...
/
தங்கம் வென்றார் ஜோதி * இந்தியன் ஓபன் ஈட்டி எறிதலில்...
தங்கம் வென்றார் ஜோதி * இந்தியன் ஓபன் ஈட்டி எறிதலில்...
தங்கம் வென்றார் ஜோதி * இந்தியன் ஓபன் ஈட்டி எறிதலில்...
ADDED : மார் 22, 2024 10:42 PM

பாட்யாலா: இந்தியன் ஓபன் ஈட்டி எறிதல் போட்டியில் ஹரியானாவில் ஜோதி தங்கம் வென்றார்.
பஞ்சாப்பில் இந்தியன் ஓபன் 'த்ரோ' (எறிதல்) போட்டி நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ஹரியானாவின் ஜோதி, 51.55 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். கர்நாடகாவின் கரிஷ்மா (51.03 மீ.,), உ.பி., யின் சலோனி (50.21 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் ஹரியானாவின் நிதி ராணி, 53.57 மீ., துாரம் எறிந்து தங்கம் தட்டிச் சென்றார். உ.பி., வீராங்கனை நீத்திகா (51.52 மீ.,), டில்லியின் பாவனா (50.63 மீ.,) அடுத்த இரு இடம் பெற்றனர்.
ஆண்களுக்கான 'ஹாம்மர் த்ரோ' போட்டியில் பஞ்சாப் வீரர் தம்னீத் சிங் (65.82 மீ.,) முதலிடம் பெற்று தங்கம் வசப்படுத்தினார். பஞ்சாப்பின் குருதேவ் சிங் (61.87 மீ.,), உ.பி.,யின் முகுல் (61.61 மீ.,) வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.
பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் மகாராஷ்டிராவின் அபா கதுவா (17.56 மீ.,) முதலிடம் பெற்றார். ஹரியானாவின் ரேகா (14.98 மீ.,), ஷிக் ஷா (14.54 மீ.,) என இருவரும் இரண்டு, மூன்றாவது இடம் பிடித்தனர்.

