தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் ஜோதி * ஜெர்மனி தடகளத்தில் அபாரம்

தங்கம் வென்றார் ஜோதி * ஜெர்மனி தடகளத்தில் அபாரம்

தங்கம் வென்றார் ஜோதி * ஜெர்மனி தடகளத்தில் அபாரம்


ADDED : மே 18, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெய்ன்ஹெய்ம்: ஜெர்மனியில் நடந்த 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி தங்கம் கைப்பற்றினார்.

ஜெர்மனியில் தேசிய தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி களமிறங்கினார். சமீபத்தில் நெதர்லாந்தில் 'ஹாரி ஷல்ட்டிங்' விளையாட்டில் தங்கம் வென்ற ஜோதி, நேற்று மீண்டும் அசத்தினார்.

பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தகுதிச்சுற்று 1ல் களமிறங்கிய 13.36 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலிலும் சிறப்பாக செயல்பட்ட ஜோதி, 13.06 வினாடி நேரத்தில் ஓடி, முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

ஜெர்மனியின் கேத்தரினா (13.61 வினாடி), லிசா (13.84 வினாடி) அடுத்த இரு இடம் பிடித்து வெள்ளி, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் ஜோதி (23.83 வினாடி) வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் தேஜா ஷிர்சே பங்கேற்றார். தகுதிச்சுற்றில் தேஜா, 13.83 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் தேஜா, 13.60 வினாடி நேரத்தில் வந்த போதும் இரண்டாவது இடம் தான் கிடைத்தது.

ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற இந்திய வீரர் முகமது அப்சல், 1 நிமிடம், 47.05 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் (20.96 வினாடி), வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us