/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் ஜோதி * 100 மீ., தடை ஓட்டத்தில் அபாரம்
/
தங்கம் வென்றார் ஜோதி * 100 மீ., தடை ஓட்டத்தில் அபாரம்
தங்கம் வென்றார் ஜோதி * 100 மீ., தடை ஓட்டத்தில் அபாரம்
தங்கம் வென்றார் ஜோதி * 100 மீ., தடை ஓட்டத்தில் அபாரம்
ADDED : மே 10, 2024 11:03 PM

உகுத்: சர்வதேச 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
நெதர்லாந்தில் 'ஹாரி ஷல்ட்டிங்' விளையாட்டு நடந்தது. பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஜோதி 28, களமிறங்கினார். தகுதிச்சுற்று 2ல் களமிறங்கிய ஜோதி, 13.04 வினாடியில் ஓடிவந்து முதலிடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஜோதி, 12.87 வினாடி நேரத்தில் வந்து, இந்த சீசனில் களமிறங்கிய முதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
நெதர்லாந்தின் மிரா குரூட் (13.67 வினாடி), ஹனா வான் (13.84 வினாடி) அடுத்த இரு இடம் பெற்று, வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.
ஒலிம்பிக் வாய்ப்பு
பாரிஸ் ஒலிம்பிக் தரவரிசைக்கான உலக தடகளத்தின் தரவரிசை பட்டியலில் ஜோதி தற்போது 26 வது இடத்தில் உள்ளார். ஒலிம்பிக் தகுதி பெறத் தேவையான நேரத்தை (12.78 வினாடி) ஜோதி எட்டவில்லை. தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக் பங்கேற்க வாய்ப்பு பெற காத்திருக்கிறார்.
தேஜாஸ் கலக்கல்
ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் தேஜாஸ் ஷிர்சே பங்கேற்றார். பைனலில் சிறப்பாக செயல்பட்ட தேஜாஸ், 13.56 வினாடி நேரத்தில் ஒடி முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்றார். இது இவரது சிறந்த ஓட்டமாக அமைந்தது. இருப்பினும் பாரிஸ் தரவரிசை பட்டியிலில் இவர் 66 வது இடத்தில் உள்ளதால், ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.