தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி: டில்லி அணி கலக்கல்

கபடி: டில்லி அணி கலக்கல்

கபடி: டில்லி அணி கலக்கல்


ADDED : டிச 12, 2024 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனே: புரோ கபடி லீக் போட்டியில் டில்லி அணி 33-27 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் டில்லி, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. டில்லி அணியினரை 'ஆல்-அவுட்' செய்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி, முதல் பாதி முடிவில் 17-13 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட டில்லி வீரர்கள், தெலுங்கு டைட்டன்ஸ் அணியினரை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். டில்லி அணி 20 புள்ளி கிடைத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 10 புள்ளி மட்டும் பெற்றது.

முடிவில் டில்லி அணி 33-27 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு நவீன் குமார் (11 புள்ளி), அஷு மாலிக் (9) கைகொடுத்தனர். தெலுங்கு டைட்டன்ஸ் சார்பில் விஜய் மாலிக் 10, ஆஷிஸ் நார்வல் 8 புள்ளி பெற்றனர். இதுவரை விளையாடிய 18 போட்டியில், 9 வெற்றி, 4 'டை', 5 தோல்வி என 61 புள்ளிகளுடன் டில்லி அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 55 புள்ளிகளுடன் (10 வெற்றி, 9 தோல்வி) 6வது இடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us