தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி: தமிழ் தலைவாஸ் கலக்கல்

கபடி: தமிழ் தலைவாஸ் கலக்கல்

கபடி: தமிழ் தலைவாஸ் கலக்கல்


ADDED : டிச 18, 2024 10:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2024 10:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனே: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 60-29 என பெங்கால் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி, முதல் பாதி முடிவில் 25-13 என முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து அசத்திய தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வீரர்களை 3 முறை 'ஆல்-அவுட்' செய்தது. இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு 35 புள்ளி கிடைத்தது. பெங்கால் அணி 16 புள்ளி மட்டும் பெற்றது.

ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 60-29 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு மொயின் ஷபாகி (13 புள்ளி), ஹிமான்ஷு (13), கேப்டன் நிதேஷ் குமார் (7), சாய் பிரசாத் (6) கைகொடுத்தனர். பெங்கால் சார்பில் மஞ்ஜீத் 7 புள்ளி பெற்றார்.

மற்றொரு லீக் போட்டியில் பாட்னா அணி 41-37 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இதுவரை விளையாடிய 20 போட்டியில், 7 வெற்றி, ஒரு 'டை', 12 தோல்வி என 45 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 9வது இடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us