/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கபடி: பாட்னா 'திரில்' வெற்றி
/
கபடி: பாட்னா 'திரில்' வெற்றி
ADDED : பிப் 05, 2024 10:40 PM

புதுடில்லி: புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா அணி 36-33 என ஜெய்ப்பூர் அணிக்கு எதிராக 'திரில்' வெற்றி பெற்றது.
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. நேற்று டில்லியில் நடந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி, முதல் பாதியில் 18-13 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட பாட்னா அணி, 2 வது நிமிடத்தில் ஜெய்ப்பூர் அணியை ஆல் அவுட்டாக்க, 19-18 என முந்தியது. 28 வது நிமிடம் 'சூப்பர் டேக்கிள்' செய்த ஜெய்ப்பூர், பாட்னா ஸ்கோரை 25-25 என சமன் செய்தது. இந்நிலையில் ஜெய்ப்பூர் மீண்டும் பின் தங்கியது (30-33). போட்டி முடிய 2 நிமிடம் இருந்த போது பாட்னா அணியை (33-32) நெருங்கியது ஜெய்ப்பூர். இருப்பினும் பாட்னா அணி 36-33 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.

