தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்


ADDED : நவ 22, 2024 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2024 10:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி 24-40 என உ.பி., அணியிடம் தோல்வியடைந்தது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. உ.பி., மாநிலம் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், உ.பி., அணிகள் மோதின. விறுவிறுப்பான முதல் பாதி 13-13 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட உ.பி., அணியினர், தமிழ் தலைவாஸ் வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். உ.பி., அணிக்கு 27, தமிழ் தலைவாஸ் அணிக்கு 11 புள்ளி கிடைத்தன.

ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 24-40 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு விஷால் சகால் (6 புள்ளி), நிதேஷ் குமார் (6) கைகொடுத்தனர். உ.பி., அணி சார்பில் பவானி ராஜ்புட் 10, ஹிதேஷ் 6 புள்ளி பெற்றனர்.

மற்றொரு லீக் போட்டியில் டில்லி அணி 35-21 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது.

தமிழ் தலைவாஸ் அணி 12 போட்டியில், 4 வெற்றி, ஒரு 'டை', 7 தோல்வி என 28 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us