/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கபடி: தமிழ் தலைவாஸ் கலக்கல்
/
கபடி: தமிழ் தலைவாஸ் கலக்கல்
ADDED : டிச 22, 2024 09:41 PM

புனே: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 42-32 என பெங்களூருவை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 14-13 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணியினர், பெங்களூரு வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். தமிழ் தலைவாஸ் அணிக்கு 28 புள்ளி கிடைத்தது. பெங்களூரு அணி 19 புள்ளி மட்டும் பெற்றது.
ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 42-32 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.தமிழ் தலைவாஸ் அணிக்கு ஹிமான்ஷு (13 புள்ளி), மொயீன் ஷபாகி (9) கைகொடுத்தனர். பெங்களூரு சார்பில் சுஷில் 15, நிதின் ராவல் 5 புள்ளி பெற்றனர். இதுவரை விளையாடிய 21 போட்டியில், 8 வெற்றி, ஒரு 'டை', 12 தோல்வி என 50 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 9வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு 'டை', 18 தோல்வி) கடைசி இடத்தில் (12வது) உள்ளது.