/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நான்காவது சுற்றில் கார்த்திக்: உலக கோப்பை செஸ் தொடரில்
/
நான்காவது சுற்றில் கார்த்திக்: உலக கோப்பை செஸ் தொடரில்
நான்காவது சுற்றில் கார்த்திக்: உலக கோப்பை செஸ் தொடரில்
நான்காவது சுற்றில் கார்த்திக்: உலக கோப்பை செஸ் தொடரில்
ADDED : நவ 09, 2025 09:35 PM

கோவா: உலக கோப்பை செஸ் தொடரின் 4வது சுற்றுக்கு இந்தியாவின் கார்த்திக் வெங்கடராமன் முன்னேறினார்.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. இதன் 4வது சுற்றுக்கு இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, பிரனவ் முன்னேறினர். 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மூன்றாவது சுற்றுக்கான 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் தமிழகத்தின் கார்த்திக் வெங்கடராமன், ருமேனியாவின் போக்டன்-டேனியல் டீக் மோதினர். முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய கார்த்திக் வெற்றி பெற்றார். முடிவில் கார்த்திக் 2.5 - 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு 'டை பிரேக்கரில்' இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின் சாம் ஷாங்க்லாந்து மோதினர். இதன் முதலிரண்டு போட்டியில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர். மூன்றாவது போட்டி 'டிரா' ஆனது. நான்காவது போட்டியில் ஏமாற்றிய விதித் தோல்வியடைந்தார். முடிவில் விதித் 2.5 - 3.5 என தோல்வியடைந்து வெளியேறினார்.
நான்காவது சுற்றுக்கு இந்தியா சார்பில் 5 பேர் முன்னேறினர்.

