/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்க மழையில் கோயன்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
/
தங்க மழையில் கோயன்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
தங்க மழையில் கோயன்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
தங்க மழையில் கோயன்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூலை 01, 2024 11:12 PM

இரண்டாம் உலகப் போர் காரணமாக டோக்கியோ (1940), லண்டன் (1944) நகரங்களில் நடக்க இருந்த 12, 13வது ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டன. பின் 1948ல் (ஜூலை 29 - ஆக. 14) இங்கிலாந்தின் லண்டனில் 14வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. வெம்பிளே மைதானத்தில் நடந்த இப்போட்டியை காண சுமார் 85 ஆயிரம் பார்வையாளர்கள் வந்தனர். மொத்தம் 59 நாடுகளை சேர்ந்த 4104 பேர் (3714 வீரர், 390 வீராங்கனைகள்) பங்கேற்றனர்.
இந்திய ஹாக்கி அணி, இங்கிலாந்தை வீழ்த்தி தொடர்ந்து 4வது முறையாக தங்கம் வென்று சாதித்தது. இதுவே சுதந்திரத்திற்கு பின் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம். பதக்கப்பட்டியலில், 38 தங்கம் வென்ற அமெரிக்கா முதலிடம் பிடித்தது.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான நெதர்லாந்து வீராங்கனை பிளாங்கர்ஸ் கோயன் 30, அசத்தினார். 100, 200 மீ., ஓட்டம், 80- மீ., தடை தாண்டும் ஓட்டம், 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் 4 தங்கம் வென்றார்.