/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'லெப்டினன்ட் கர்னல்' நீரஜ் சோப்ரா * இந்திய ராணுவத்தில் கவுரவம்
/
'லெப்டினன்ட் கர்னல்' நீரஜ் சோப்ரா * இந்திய ராணுவத்தில் கவுரவம்
'லெப்டினன்ட் கர்னல்' நீரஜ் சோப்ரா * இந்திய ராணுவத்தில் கவுரவம்
'லெப்டினன்ட் கர்னல்' நீரஜ் சோப்ரா * இந்திய ராணுவத்தில் கவுரவம்
ADDED : அக் 22, 2025 10:49 PM

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னல்' அந்தஸ்து நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26. கடந்த 2021ல் டோக்கியோவில் அசத்திய இவர், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (2023, புடாபெஸ்ட்) தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்றார். இதையடுத்து சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.
தவிர, ஈட்டி எறிதலில் 90 மீ., துாரத்துக்கும் மேல் எறிந்த முதல் இந்தியர் ஆனார். கடந்த மே மாதம் தோகா போட்டியில் 90.23 மீ., துாரம் எறிந்தார்.
கடந்த 2016ல் புனேயில் உள்ள இந்திய ராணுவத்தின் 'மிஷன் ஒலிம்பிக்' பிரிவு சார்பில் நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டார். பின் இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2018ல் 'சுபேதாராக' பதவி உயர்வு பெற்ற நீரஜ் சோப்ரா, பின் 2022ல் சுபேதார் மேஜராக நியமிக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னல்' ஆக பதவி உயர்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று டில்லி சவுத் பிளாக்கில் நடந்த விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி ஜெனரல், உபேந்திர திவேதி, நீரஜ் சோப்ராவுக்கு முறைப்படி 'லெப்டினன்ட் கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுரவித்தனர்.
ராஜ்நாத் சிங் கூறுகையில்,'' லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா, ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வுடன், தேசத்தின் பெருமையாக திகழ்கிறார். விளையாட்டு நட்சத்திரங்கள், ராணுவத்தினருக்கு துாண்டுகோலாக உள்ளார். தேசபக்தி, விடாமுயற்சியுடன் தேசத்தின் மகிழ்ச்சிக்கு பாடுபடுகிறார்,'' என்றார்.