தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/லண்டன் கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

லண்டன் கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

லண்டன் கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'


ADDED : நவ 30, 2025 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 11:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: கிளாசிக் செஸ் தொடரின் 4, 5வது சுற்று போட்டிகளை இந்தியாவின் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.

லண்டனில், கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் பிரக்ஞானந்தா, 4வது சுற்றில் சகவீரர் பிரனவ் ஆனந்தை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார். அடுத்து நடந்த 5வது சுற்றில் பிரக்ஞானந்தா (கருப்பு), ஹங்கேரியின் தாமஸ் ஜூனியர் போடோரை (வெள்ளை) சந்தித்தார். இப்போட்டி 21வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மற்றொரு 5வது சுற்றில் இந்தியாவின் பிரனவ் ஆனந்த் (வெள்ளை), 45வது நகர்த்தலில் ரஷ்யாவின் டேனியல் யூபாவை (கருப்பு) வீழ்த்தினார். இந்தியாவின் இனியன் (வெள்ளை), 49வது நகர்த்தலில் இங்கிலாந்தின் ஜோனா பி வில்லோவை (கருப்பு) தோற்கடித்தார்.

ஐந்து சுற்றுகளின் முடிவில் பிரனவ் ஆனந்த், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா, இனியன் உள்ளிட்டோர் தலா 4.0 புள்ளிகளுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us