தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/நீளம் தாண்டுதல்: லோகேஷ் 'தங்கம்'

நீளம் தாண்டுதல்: லோகேஷ் 'தங்கம்'

நீளம் தாண்டுதல்: லோகேஷ் 'தங்கம்'


ADDED : மார் 14, 2026 10:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 10:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்கன்சாஸ்: உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் லோகேஷ் தங்கம் கைப்பற்றினார்.

அமெரிக்காவில், என்.சி.ஏ.ஏ., உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் ('டிவிசன்-1') நடந்தது. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் லோகேஷ் சத்யநாதன் 26, பங்கேற்றார். நான்காவது வாய்ப்பில் அதிகபட்சமாக 8.21 மீ., தாண்டிய லோகேஷ், தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், உள்ளரங்கு நீளம் தாண்டுதலில் அதிக துாரம் (8.21 மீ.,) தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன், இவர் 8.02 மீ., தாண்டியது தேசிய சாதனையாக இருந்தது.

நீளம் தாண்டுதலில் 8.20 மீ., துாரம் தாண்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் லோகேஷ். ஏற்கனவே இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் (8.42 மீ.,), முரளி ஸ்ரீசங்கர் (8.41 மீ.,) இம்மைல்கல்லை எட்டினர். தவிர இவர், என்.சி.ஏ.ஏ., 'டிவிசன்-1' போட்டியில் தங்கம் கைப்பற்றிய 4வது இந்திய தடகள வீரரானார். ஏற்கனவே மொஹிந்தர் சிங் கில் ('டிரிபிள்ஜம்ப்'/நீளம் தாண்டுதல்), விகாஸ் கவுடா (வட்டு எறிதல்), தேஜஸ்வின் சங்கர் (உயரம் தாண்டுதல்) தங்கம் வென்றிருந்தனர்.

இப்போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கத்தை முறையே அமெரிக்காவின் டி'ஆன்ட்ரே வார்டு (8.20 மீ.,), ஜிம்பாப்வேயின் டபாட்ஸ்வா சிகோம்பா (8.15 மீ.,) கைப்பற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us