தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி

மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி

மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி


ADDED : ஆக 23, 2026 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 11:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹல்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. ஹல் நகரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், ஹல் சிட்டி அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய மான்செஸ்டர் யுனைடெட் அணி 0-2 என, அதிர்ச்சி தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் எவர்டன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தியது.

ரியல் மாட்ரிட் கலக்கல்

பார்சிலோனா: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த லீக் போட்டியில் ஸ்பான்யோல், ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. ஜூட் பெல்லிங்காம், கார்லஸ் எஸ்பி தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க ரியல் மாட்ரிட் அணி 2-0 என வெற்றி பெற்றது. வாலன்சியா, செல்டா விகோ அணிகள் மோதிய மற்றொரு போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

ஸ்வியாடெக் தோல்வி

சின்சினாட்டி: அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். இதில் ஸ்வியாடெக் 5-7, 6-4, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 6-1 என, செக்குடியரசின் சாரா பெஜ்லெக்கை வென்றார்.

எக்ஸ்டிராஸ்

* கொல்கட்டாவில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து பைனலில், ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் அணிகள் மோதின. இதில் எட்மண்ட் லால்ரிண்டிகா 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுக்க, ஈஸ்ட் பெங்கால் அணி 4-1 என வெற்றி பெற்றது. அதிக முறை (தலா 17) கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை மோகன் பகானுடன் பகிர்ந்து கொண்டது ஈஸ்ட் பெங்கால்.

* பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் காலிறுதியில், கிழக்கு, வடகிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. கிழக்கு மண்டல அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (8), கேப்டன் இஷான் கிஷான் (4) ஏமாற்றினர். சுதிப் குமார் (146), ஷாபாஸ் அகமது (100*) கைகொடுக்க, முதல் நாள் முடிவில் கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 355/6 ரன் எடுத்திருந்தது.

* ஜப்பானில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுக்கான டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அன்கிதா ரெய்னா, ருதுஜா, சுமித் நாகல், தக் ஷினேஸ்வர் சுரேஷ், யூகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி, அனிருத் சந்திரசேகர் இடம் பெற்றுள்ளனர்.

* டில்லியில் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பைனலில், தென் கொரியாவின் ஆன் சே யங் 21-17, 21-14 என, ஜப்பானின் அகானே யமாகுச்சியை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் பைனலில் பிரான்சின் அலெக்ஸ் லானியர் 21-11, 21-11 என, ஜப்பானின் நரவோகாவை வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us