/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: மணிகா அசத்தல்
/
டேபிள் டென்னிஸ்: மணிகா அசத்தல்
ADDED : மே 06, 2024 10:27 PM

ஜெட்டா: சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிசில் உலகின் 'நம்பர்-2' வீராங்கனையை வீழ்த்தினார் மணிகா பத்ரா.
சவுதி அரேபியாவில் சர்வதேச 'சவுதி ஸ்மாஷ்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை, சீனாவின் வான் மான்யுவை சந்தித்தார். முதல் செட்டை 6-11 என கோட்டை விட்ட மணிகா, அடுத்த இரு செட்டை 11-5, 11-7 என வென்றார். நான்காவது செட்டை 12-10 என போராடி கைப்பற்றினார். முடிவில் மணிகா 3-1 என வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் 'ரவுண்டு16' சுற்றில் இந்தியாவின் யாஷஸ்வினி, ஹர்மீத் தேசாய் ஜோடி, உலகின் 'நம்பர்-6' இடத்திலுள்ள, ஸ்பெயினின் மரியா ஜியாவோ, ஆல்வரோ ரோபிள்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 11-5 என கைப்பற்றிய இந்திய ஜோடி, அடுத்த இரு செட்டுகளை 5-11, 3-11 என எளிதாக இழந்தது.
பின் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி, கடைசி இரு செட்டை 11-7, 11-7 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி, எகிப்தின் மார்வா, மரியம் ஜோடியை சந்தித்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 3-0 (11-7, 11-3, 11-4) என வெற்றி பெற்றது.