/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மணிகா-சத்யன் ஜோடி ஏமாற்றம் * ஒலிம்பிக் தகுதி போட்டியில்
/
மணிகா-சத்யன் ஜோடி ஏமாற்றம் * ஒலிம்பிக் தகுதி போட்டியில்
மணிகா-சத்யன் ஜோடி ஏமாற்றம் * ஒலிம்பிக் தகுதி போட்டியில்
மணிகா-சத்யன் ஜோடி ஏமாற்றம் * ஒலிம்பிக் தகுதி போட்டியில்
ADDED : ஏப் 11, 2024 10:11 PM

ஹவிரோவ்: ஒலிம்பிக் தகுதி டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் காலிறுதியில் மணிகா, சத்யன் ஜோடி தோல்வியடைந்தது.
பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்க உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அணிகளுக்காக தகுதிப் போட்டி செக் குடியரசில் நடக்கிறது. இந்தியாவின் மணிகா பத்ரா, சத்யன் உட்பட மொத்தம் 26 ஜோடி பங்கேற்கின்றன.
இதில் காலிறுதி 'ஸ்டேஜ் 1' போட்டியில் மணிகா-சத்யன் ஜோடி, கிரீசின் ஜார்ஜியாஸ், மலமடேனியா ஜோடியை எதிர்கொண்டது. முதல் இரு செட்டை 11-8, 11-9 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த இரு செட்டையும் 11-8, 11-6 என வசப்படுத்தியது முடிவில் இந்திய ஜோடி 4-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது
இதில் வென்றால் ஒலிம்பிக் தகுதி பெறலாம் என்ற நிலையில், வடகொரியாவின் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் ஜோடியை சந்தித்தது. இதில் 1-4 (7-11, 10-12, 11-9, 6-11, 6-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இன்று மீண்டும் காலிறுதி 'ஸ்டேஜ் 1' போட்டியில் மணிகா-சத்யன் ஜோடி களமிறங்குகிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால் ஒலிம்பிக் செல்லலாம்.

