தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மனோஜ் குமார் ஓய்வு: குத்துச்சண்டையில் இருந்து

மனோஜ் குமார் ஓய்வு: குத்துச்சண்டையில் இருந்து

மனோஜ் குமார் ஓய்வு: குத்துச்சண்டையில் இருந்து


ADDED : ஜன 30, 2025 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவின் மனோஜ் குமார், குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் 39. ஹரியானாவை சேர்ந்தவர். கடந்த 2007ல் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இவர், 2008ல் முதன்முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பின், 2010ல் நடந்த டில்லி காமன்வெல்த் விளையாட்டில் தங்கத்தை தட்டிச் சென்றார். தொடர்ந்து அசத்திய இவர், ஆசிய சாம்பியன்ஷிப் (2013, வெண்கலம்), தோகா சர்வதேச தொடர் (2015, தங்கம்), தெற்காசிய விளையாட்டு (2016, தங்கம்), இந்திய ஓபன் (2018, வெண்கலம்), காமன்வெல்த் விளையாட்டில் (2018, வெண்கலம்) பதக்கம் வென்றார். லண்டன் (2012), ரியோ (2016) ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை சென்றிருந்தார். கடந்த 2014ல் 'அர்ஜுனா' விருது வென்றார்.

காயம், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். கடந்த 2021ல் பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் (என்.ஐ.எஸ்.,) பயிற்சியாளருக்கான 'டிப்ளமோ' பயின்றார்.

இந்நிலையில் ஓய்வு அறிவித்த மனோஜ், தனது நீண்ட கால பயிற்சியாளரான ராஜேஷ் குமாருடன் இணைந்து உருவாக்கிய குத்துச்சண்டை அகாடமியில் பயிற்சியாளராக செயல்படப்போவதாக தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us