/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பைனலுக்கு முன்னேறினார் மனு பாகர்: துப்பாக்கி சுடுதலில் மீண்டும் அசத்தல்
/
பைனலுக்கு முன்னேறினார் மனு பாகர்: துப்பாக்கி சுடுதலில் மீண்டும் அசத்தல்
பைனலுக்கு முன்னேறினார் மனு பாகர்: துப்பாக்கி சுடுதலில் மீண்டும் அசத்தல்
பைனலுக்கு முன்னேறினார் மனு பாகர்: துப்பாக்கி சுடுதலில் மீண்டும் அசத்தல்
ADDED : ஆக 02, 2024 11:58 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை மனு பாகர் முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் மனு பாகர், ஈஷா சிங் பங்கேற்றனர். இதில் 'பிரிசிசியன்', 'ரேபிட்' என இரு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. 'பிரிசிசியன்' சுற்றில் 294 புள்ளி (97, 98, 99) பெற்ற மனு பாகர், 'ரேபிட்' பிரிவில் 296 புள்ளி (100, 98, 98) பெற்றார். ஒட்டுமொத்தமாக 590.24 புள்ளி பெற்ற மனு பாகர், 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.
கிடைக்குமா 'ஹாட்ரிக்': இம்முறை 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர், கலப்பு அணிகள் பிரிவில் தலா ஒரு வெண்கலம் வென்ற மனு பாகர், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இன்றைய பைனலில் மீண்டும் சாதித்தால், ஒரே ஒலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைக்கலாம்.
ஈஷா ஏமாற்றம்: மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங், 'பிரிசிசியன்' சுற்றில் 291 புள்ளி (95, 96, 100) பெற்றார். அடுத்து நடந்த 'ரேபிட்' சுற்றில் 290 புள்ளி (97, 96, 97) பெற்ற இவர், ஒட்டுமொத்தமாக 581.17 புள்ளி கைப்பற்றினார். முடிவில் 18வது இடம் பிடித்த ஈஷா சிங், பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
அனந்த்ஜீத் 26வது இடம்
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா பங்கேற்றார். முதல் நாள் முடிவில் 68 புள்ளி (23, 22, 23) பெற்ற அனந்த்ஜீத், 26வது இடத்தில் உள்ளார். இன்று நடக்கும் தகுதிச் சுற்றில் எழுச்சி கண்டால், 'டாப்-6' வரிசையில் இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறலாம்.