தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மராத்தாஸ் ‘திரில்’ வெற்றி: வில்வித்தை பிரிமியர் லீக் தொடரில்

மராத்தாஸ் ‘திரில்’ வெற்றி: வில்வித்தை பிரிமியர் லீக் தொடரில்

மராத்தாஸ் ‘திரில்’ வெற்றி: வில்வித்தை பிரிமியர் லீக் தொடரில்


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: வில்வித்தை பிரிமியர் லீக் தொடரில் மராத்தாஸ் அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.

ஐதராபாத்தில் வில்வித்தை பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் செரோ ஆர்ச்சர்ஸ், மராத்தாஸ் அணிகள் மோதின. ஆசிய விளையாட்டில் 2 தங்கம் வென்ற கும்கும், திராஜ் பொம்மதேவரா செரோ அணியில் இடம் பெற்றுள்ளார். முதல் செட்டை செரோ அணி (76–74) வென்றது. அடுத்த இரண்டு செட் (76–76, 77–77) என சமன் ஆனது. 4வது, கடைசி செட்டை செரோ அணி 76–77 என இழந்தது. முடிவில் போட்டி 4–4 என சமன் ஆனது. அடுத்து நடந்த ‘ஷூட் ஆப்பில்’ 2–1 என மராத்தாஸ் அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் சோழா அணி 5–1 என நடப்பு சாம்பியன் ராஜ்புதனா ராயல்ஸ் அணியிடம் வீழ்ந்தது. மூன்றாவது போட்டியில் காகத்தியா நைட்ஸ், 6–2 என பிரித்விராஜ் யோதாஸ் அணியை சாய்த்தது.

இதுவரை நடந்த போட்டி முடிவில் தலா 6 புள்ளியுடன் செரோ ஆர்ச்சர்ஸ், காகத்தியா, மராத்தாஸ் அணிகள் ‘டாப்–3’ இடத்தில் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us