தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மயாமி ஓபன்: பைனலில் சின்னர்

மயாமி ஓபன்: பைனலில் சின்னர்

மயாமி ஓபன்: பைனலில் சின்னர்


ADDED : மார் 28, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயாமி: அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். இதில் சின்னர் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-2, 6-2 என, பிரான்சின் ஆர்தர் பில்சை வீழ்த்தினார்.

ஜெர்மனிக்கு ஜெயம்

பசல்: சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4-3 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இங்கிலாந்து, உருகுவே அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. ஸ்பெயின் அணி 3-0 என, செர்பியாவை வீழ்த்தியது.

ஜோகோவிச் விலகல்

மான்டி கார்லோ: மொனாகோவில், மான்டி கார்லோ ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் வரும் ஏப். 5-12ல் நடக்கவுள்ளது. இதன் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் 38, பங்கேற்க இருந்தார். ஏற்கனவே வலது தோள்பட்டை காயத்தால் மயாமி ஓபனில் இருந்து விலகிய இவர், முழு உடற்தகுதி பெறததால், மான்டி கார்லோ தொடரில் இருந்தும் விலகினார். கடைசியாக இவர், பரிபாஸ் ஓபனில் பங்கேற்றார்.

எக்ஸ்டிராஸ்

* ஆமதாபாத்தில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் அரையிறுதியில், இந்தியாவின் சித்தார்த் ரவாத் 7-6, 6-3 என இத்தாலியின் அலெக்சாண்டர் பிண்டாவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் ரதி 4-6, 5-7 என சுவீடனின் லியோ போர்க்கிடம் தோல்வியடைந்தார்.

* ஹரியானாவின் குருகிராமில், செவித்திறன் குறைபாடுள்ள பெண்களுக்கான 'டி-10' தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடந்தது. பைனலில் ஆந்திரா அணி (73/4) 5 ரன் வித்தியாசத்தில் டில்லி அணியை (68/4) வீழ்த்தி கோப்பை வென்றது.

* சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், 'கேலோ இந்தியா' பழங்குடியினர் விளையாட்டு நடக்கிறது. பளுதுாக்குதலில் (77 கிலோ) சத்தீஸ்கர் வீராங்கனை நிகிதா (160 கிலோ) தங்கம் வென்றார். ஒடிசா நீச்சல் வீராங்கனைகளான ரித்திகா மின்ஸ் (100 மீ., 'பிரீஸ்டைல்'), அஞ்சலி முண்டா (50 மீ., 'பேக்ஸ்டிரோக்') தங்கம் கைப்பற்றினர். பதக்கப்பட்டியலில் கர்நாடகா (15 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம்) முதலிடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us