தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இளம் வீரரிடம் வீழ்ந்தார் மைக் டைசன்

இளம் வீரரிடம் வீழ்ந்தார் மைக் டைசன்

இளம் வீரரிடம் வீழ்ந்தார் மைக் டைசன்


UPDATED : நவ 16, 2024 11:16 PM

ADDED : நவ 16, 2024 09:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2024 11:16 PM ADDED : நவ 16, 2024 09:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்லிங்டன்: முன்னாள் உலக சாம்பியன் மைக் டைசன், 58 வயதிலும் தளராமல் குத்துச்சண்டை கோதாவில் இறங்கினார். இளம் வீரரிடம் தோல்வி அடைந்தார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் 'ஹெவிவெயிட்' பிரிவில் அமெரிக்காவின் மைக் டைசன் 58, ஜேக் பால் 27, மோதினர். மொத்தம் 8 சுற்றுகள், தலா 2 நிமிடம் நடந்தன.

இருபது ஆண்டுகளுக்கு பின் போட்டியில் பங்கேற்ற மைக் டைசன், தன்னை விட 31 வயது குறைவான இளம் வீரருக்கு எதிராக தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டார். எதிரணி வீரரை ஒரு சில 'பஞ்ச்' மட்டுமே செய்தார். மூன்று நடுவர்களில், ஒருவர் 80-72 என்றும், இருவர் 79-73 என்றும் ஜேக் பாலுக்கு சாதகமாக புள்ளி வழங்கினர். முடிவில் ஜேக் பால் ஒருமனதாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது, தொழில்முறை போட்டியில் ஜேக் பால் பெற்ற 11வது வெற்றி. தவிர இது, முன்னாள் உலக சாம்பியன் மைக் டைசனின் 7வது தோல்வி. ஜேக் பால், ரூ. 338 கோடி பரிசுத்தொகை வென்றார். மைக் டைசனுக்கு ரூ. 168 கோடி பரிசு கிடைத்தது.

கன்னத்தில் அறைந்தார்

இப்போட்டிக்கு முதல் நாள் வீரர்களின் எடை சோதனை செய்யப்பட்டது. அப்போது மைக் டைசன் திடீரென ஜேக் பாலின் கன்னத்தில் அறைந்தார். . இதனால் அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு உண்டானது.



முன்னாள் உலக சாம்பியன்

முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியன் மைக் டைசன் 58. இப்போட்டிக்கு முன் விளையாடிய 58 போட்டியில், 50ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்திருந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பிய இவர், தோல்வியை பதிவு செய்தார்.

'யு டியூப்' பிரபலம்அமெரிக்காவை சேர்ந்த 'யு டியூப்' பிரபலம் ஜேக் பால் 27. கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். முன்னதாக விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றிருந்தார். இதில் 7 முறை 'நாக் அவுட்' முறையில் வெற்றி கண்டார். மைக் டைசனை வீழ்த்தி, நடப்பு ஆண்டில் மூன்றாவது வெற்றியை பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us