உள்ளடக்கத்திற்கு செல்ல

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மும்பை அணி மீண்டும் சாம்பியன்: அல்டிமேட் டேபிள் டென்னிசில் கலக்கல்
மும்பை அணி மீண்டும் சாம்பியன்: அல்டிமேட் டேபிள் டென்னிசில் கலக்கல்
மும்பை அணி மீண்டும் சாம்பியன்: அல்டிமேட் டேபிள் டென்னிசில் கலக்கல்
UPDATED : ஜூலை 26, 2026 11:59 PM
ADDED : ஜூலை 25, 2026 11:05 PM

அ நிறம் | அளவு
கோவா: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் மும்பை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 8-5 என, கோவா அணியை வீழ்த்தியது.
கோவாவில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 7வது சீசன் நடந்தது. இதன் பைனலில் கோவா, மும்பை அணிகள் மோதின. அபாரமாக ஆடிய மானுஷ் ஷா தலைமையிலான மும்பை அணி 8-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது.
இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை கோவா அணியுடன் (2023, 2024) பகிர்ந்து கொண்டது மும்பை (2025, 2026).
