/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தேசிய குத்துச்சண்டை: ஷிவா தபா ஏமாற்றம்
/
தேசிய குத்துச்சண்டை: ஷிவா தபா ஏமாற்றம்
ADDED : ஜன 13, 2025 09:16 PM

பரேலி: தேசிய குத்துச்சண்டை அரையிறுதியில் அசாமின் ஷிவா தபா, ஹிமாச்சல பிரதேசத்தின் அபினாஷிடம் தோல்வியடைந்தார்.
உ.பி., மாநிலம் பரேலியில், தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 8வது சீசன் நடக்கிறது. இதன் 60---65 கிலோ பிரிவு அரையிறுதியில் அசாமின் ஷிவா தபா, ஹிமாச்சல பிரதேசத்தின் அபினாஷ் மோதினர். இதில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய ஷிவா தபா தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு அரையிறுதியில் (55-60 கிலோ) சர்வீசஸ் அணியின் சச்சின் சிவாச், ஹரியானாவின் கோரிஷ் புஜானியை வீழ்த்தினார். லக்சயா சகார் (75-80 கிலோ), ஜதுமணி சிங் (பிளைவெயிட்), ஹிதேஷ் (லைட் மிடில்வெயிட்), தீபக் (வெல்டர்வெயிட்), விஷால் (ஹெவிவெயிட்) என சர்வீசஸ் அணியின் 8 பேர் பைனலுக்கு முன்னேறினர்.
'சூப்பர் ஹெவிவெயிட்' (90-90+ கிலோ) பிரிவு அரையிறுதியில் உத்தரகாண்டின் நரேந்தர், சர்வீசஸ் அணியின் கவுரவ் சவுகானை வீழ்த்தினார். இப்பிரிவின் மற்றொரு அரையிறுதியில் ஹரியானாவின் அன்ஷுல் கில், ராகவ் சர்மாவை தோற்கடித்தார்.