/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தேசிய 'கோ கோ': ரயில்வே 'சாம்பியன்'
/
தேசிய 'கோ கோ': ரயில்வே 'சாம்பியன்'
ADDED : ஜன 15, 2026 08:49 PM

காசிபேட்: தேசிய 'கோ கோ' தொடரில் ரயில்வே, மகாராஷ்டிரா அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
தெலுங்கானாவில், சீனியர் தேசிய 'கோ கோ' சாம்பியன்ஷிப் 58வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான பைனலில் மகாராஷ்டிரா, 'நடப்பு சாம்பியன்' ரயில்வே அணிகள் மோதின. இதில் ரயில்வே அணி 26-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது.
பெண்களுக்கான பைனலில் 'நடப்பு சாம்பியன்' மகாராஷ்டிரா, ஒடிசா அணிகள் மோதின. இதில் மகாராஷ்டிரா அணி 23-22 என்ற புள்ளி கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஆண்கள், பெண்கள் பிரிவில் முறையே மகாராஷ்டிரா, ஒடிசா அணிகள் தொடர்ந்து 2வது முறையாக வெள்ளி வென்றன.

