/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தேசிய ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்
/
தேசிய ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்
ADDED : ஆக 28, 2025 10:44 PM

புதுடில்லி: தேசிய ஸ்குவாஷ் தொடரில் வேலவன், அனாஹத் சாம்பியன் பட்டம் வென்றனர்.
டில்லியில், தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 81வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான பைனலில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அபய் சிங் மோதினர். அபாரமாக ஆடிய வேலவன் 3-1 (11-8, 11-9, 4-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2023, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய அபய் சிங், 2வது இடம் பிடித்தார்.
பெண்களுக்கான பைனலில், டில்லியின் அனாஹத் சிங், கோவாவின் அகன்ஷா சலுங்கே மோதினர். இதில் அசத்திய அனாஹத் 3-0 (11-7, 11-6, 11-4) என வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக (2023-25) கோப்பை வென்றார். அரையிறுதியில் ஜோஷ்னாவை வீழ்த்திய அகன்ஷா, 2வது இடம் பிடித்தார்.