/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உயரம் தாண்டுதல்: கோபிகா 'தங்கம்' * இந்திய ஓபன் தடகளத்தில் அபாரம்
/
உயரம் தாண்டுதல்: கோபிகா 'தங்கம்' * இந்திய ஓபன் தடகளத்தில் அபாரம்
உயரம் தாண்டுதல்: கோபிகா 'தங்கம்' * இந்திய ஓபன் தடகளத்தில் அபாரம்
உயரம் தாண்டுதல்: கோபிகா 'தங்கம்' * இந்திய ஓபன் தடகளத்தில் அபாரம்
ADDED : செப் 29, 2024 10:50 PM

பாட்னா: இந்தியன் ஓபன் தடகளம், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
இந்தியன் ஓபன் தடகள போட்டி (23 வயதுக்குட்பட்ட) பீஹாரில் நடக்கிறது. நேற்று இரண்டாவது நாள் போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா, அதிகபட்சம் 1.76 மீ., உயரம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதே உயரத்தை இரண்டாவது வாய்ப்பில் தாண்டியதால், குஜராத்தின் பயலுக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இருவரும் இந்தியன் ஓபன் தடகளத்தின் சாதனையை சமன் செய்தனர். இதற்கு முன் 2022ல் கெவினா 1.76 மீ., உயரம் தாண்டி இருந்தார்.
கர்நாடகாவின் பல்லவி (1.72 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார். தமிழகத்தின் வர்ஷா (1.66 மீ.,) நான்காவது இடம் பிடித்தார்.
ரதிஷ் 'வெள்ளி'
ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டம் நடந்தது. தமிழக வீரர் ரதிஷ், 14.56 வினாடி நேரத்தில் ஓடி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஒடிசா வீரர் ஜீவா (14.49 வினாடி) தங்கம் வென்றார். தமிழகத்தின் மற்றொரு வீரர் சுபாஷ் (14.66 மீ.,) 4வது இடம் பெற்றார்.
ஏஞ்சல் வெண்கலம்
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் ஏஞ்சல் சில்வியா, 11.98 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப்பதக்கம் வசப்படுத்தினார். மஹாராஷ்டிராவின் சுதேஷ்னா (11.76 வினாடி), ஹரியானாவின் தமன்னா (11.88 வினாடி) தங்கம், வெள்ளி வென்றனர்.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தமிழ் அரசு, 10.66 வினாடி நேரத்தில் ஓடி, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார். ஒடிசா வீரர் அனிமேஷ் (10.40), சண்டிகாரின் கோவிந்த் குமார் (10.88) முதல் இரு இடம் பிடித்தனர்.
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் விஷால் (46.77 வினாடி) மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். டில்லியின் துஷார் (45.92 வினாடி) முதலிடம் பிடித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 5000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற உத்தரகாண்டின் அங்கிதா, நேற்று 3000 மீ., ஸ்டீபிள்சேஸ் போட்டியில் களமிறங்கினார். இவர், 10 நிமிடம் 17.25 வினாடி நேரத்தில் வந்து தங்கம் வென்றார்.