/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பளுதுாக்குதல்: ஹர்ஜிந்தர் சாதனை
/
பளுதுாக்குதல்: ஹர்ஜிந்தர் சாதனை
ADDED : அக் 11, 2024 10:37 PM

காங்க்ரா: தேசிய பளுதுாக்குதலில் மூன்று புதிய சாதனை படைத்தார் ஹர்ஜிந்தர் கவுர்.
இமாச்சல பிரதேசத்தில் தேசிய பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் (யூத், ஜூனியர், சீனியர்) நடக்கிறது. 480 வீரர், 380 வீராங்கனை என மொத்தம் 860 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
'சீனியர்' பெண்களுக்கான 71 கிலோ பிரிவில் பஞ்சாப்பின் ஹர்விந்தர் கவுர் களமிறங்கினார்.
2022 காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலம் வென்ற இவர், முதலில் ஸ்னாட்ச் பிரிவில் 98 கிலோ துாக்கினார். தனது முந்தைய தேசிய சாதனையை (96 கிலோ) தகர்த்தார்.
கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 125 கிலோ துாக்கி, மீண்டும் தேசிய சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக 223 கிலோ துாக்கி, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்றார்.
தவிர இதுவும் புதிய சாதனை ஆனது. முன்னதாக 2023ல் இவர் 220 கிலோ துாக்கி இருந்தார்.
ஆண்களுக்கான 81 கிலோ பிரிவில் அபிஷேக், 318 கிலோ துாக்கி தங்கம் கைப்பற்றினார். காமன்வெல்த்தில் தங்கம் வென்ற அசிந்தா சியுலி, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார்.

