/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீரஜ் சோப்ரா புறக்கணிப்பா * ஒலிம்பிக் கொடி கவுரவத்தில் சர்ச்சை
/
நீரஜ் சோப்ரா புறக்கணிப்பா * ஒலிம்பிக் கொடி கவுரவத்தில் சர்ச்சை
நீரஜ் சோப்ரா புறக்கணிப்பா * ஒலிம்பிக் கொடி கவுரவத்தில் சர்ச்சை
நீரஜ் சோப்ரா புறக்கணிப்பா * ஒலிம்பிக் கொடி கவுரவத்தில் சர்ச்சை
ADDED : மார் 29, 2024 10:52 PM

புதுடில்லி: ''பாரிஸ் ஒலிம்பிக்கில் மூவர்ணக் கொடி ஏந்திச் செல்லும் வாய்ப்பை நீரஜ் சோப்ராவுக்கு வழங்காதது ஏன்,'' என அஞ்சு பாபி ஜார்ஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11 ல் நடக்கவுள்ளது. இதன் துவக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்த வாய்ப்பு தரப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஒ.ஏ.,) இம்முடிவுக்கு முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனையும் இந்திய தடகள கூட்டமைப்பின் துணைத் தலைவருமான அஞ்சு பாபி ஜார்ஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இவர் கூறுகையில்,'' ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கான பட்டியலை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட எந்த இந்திய விளையாட்டு கூட்டமைப்புகளும் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக் துவக்கவிழாவில் தேசியக் கொடி ஏந்திச் செல்லும் வீரர் எப்படி தேர்வு செய்யப்பட்டார். 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு வாய்ப்பு வழங்காதது ஆச்சரியமாக உள்ளது,'' என்றார்.

